MOST RECENT

கொ‌ரிய ‌‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் : வட கொ‌ரியா எ‌ச்ச‌ரி‌க்கை


அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து போ‌ர் ஒ‌த்‌திகை நட‌த்துவதா‌ல் கொ‌‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக வட கொ‌‌ரியா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.



8:59 AM | Posted in , | Read More »

ஒபாமாவின் செல்வாக்கு குறைந்தது

அமெரிக்காவில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்தது.
இதை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு
குறித்து மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், “வாஷிங்டன் டைம்ஸ்” பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் ஒபாமாவுக்கு எதிராக 49 சதவீதம் பேர் வாக்களித்தனர். அவர்கள் வருகிற 2012-ம் ஆண்டு மீண்டும் அவர் ஜனாதிபதியாக கூடாது என தெரிவித்தனர். 41 சதவீதம் பேர் மட்டுமே அவர் மீண்டும் ஜனாதிபதியாக ஆதரவளித்துள்ளனர்.

அதேபோல குன்னிபியாக் பல்கலைக்கழகத்தின் தேர்தல் பிரிவு மாணவர்கள் நாடு முழுவதும் டெலிபோன் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்தினர். 2424 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பிலும் இதே கருத்துதான் நிலவியது.

இதன் மூலம் ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னி, மிக் ஹீகாய ஆகியோர் ஒபாமாவுக்கு போட்டியாக திகழ்கின்றனர்.

அதே நேரத்தில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர்கள் இன்னும் எந்தவித முடிவுக்கும் வரவில்லை. 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யவில்லை.

8:57 AM | Posted in , , , | Read More »

பிரித்தானியாவில் மோசமான காலநிலை : மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை


நேற்றிரவு பிரிட்டனின் பல இடங்களில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் மேல் போனது. எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பனிப்பொழிவும் இருந்தது. ஸ்காட்லாந்து, வட கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் அண்ணளவாக 15 அங்குல பனிப்பொழிவு நேற்று பதிவாகியுள்ளது.
மேலும் வானிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்த பகுதிகளில் 40 செண்டிமீட்டர் அளவிற்கு பனிபொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.
தேவையின்றி சாலைகளுக்கு வருவதை தவிர்த்து உள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மோசமான் வானிலையினால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் வருகின்றன. ஷெப்பீல்டு அருகே எம்.1 நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாயை காப்பாற்றச் சென்ற ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஷாப்பிங் சென்ற மக்கள் பனிப்பொழிவினால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

8:55 AM | Posted in , | Read More »

Blog Archive

Recently Commented

Recently Added