MOST RECENT

பனாமா நிதி ஆலோசனை நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற பணச்சலவை

பனாமா நிதி ஆலோசனை நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற பணச்சலவை தொடர்பான ஆவணங்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.இதற்காக பிரத்தியேக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு நாட்டினதும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் குறித்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.வரி விதிப்பில் இருந்து தப்பிக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், தனி நபர்களும் குறித்த நிறுவனத்தின் ஊடாக, தங்களின் பணத்தை வைப்பு செய்துள்ளனர்.இவ்வாறு ஒரு இலங்கை நிறுவனத்தினதும், இலங்கையுடன் தொடர்புடைய 51 முகவரிகளுக்கு உரிய 60க்கும் அதிகமா
இலங்கையர்களினதும் விபரங்கள் இதில் வெளியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

10:27 PM | Posted in , , , | Read More »

ஆ ஷ ஸ் முத ல் டெ ஸ் ட் சமநிலையில் முடிவு


பி‌ரி‌ன்பே‌னி‌ல் ந‌ட‌ந்த முதல‌் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி இ‌‌ங்‌கிலா‌ந்து, அவுஸ்திரே‌லிய அ‌ணிகளு‌க்கு வெ‌‌ற்‌றி‌த் தோ‌ல்‌‌வி‌யி‌ன்‌றி சமநிலயில் முடிவடை‌ந்தது.இரு அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 260 ரன்னும், அவுஸ்திரேலியா 481 ரன்னும் எடுத்தன.

221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்து இருந்தது. குக் 132 ரன்களுடனும், ஸ்ட்ராஸ் 54 ரன் னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்றைய 5வது நாள் ஆட்டத்தில் தொடந்து சிறப்பாக விளையாடிய குக் இரட்டை சதம் அடித்தார். அவரது முதல் இரட்டை சதம் இதுவாகும். 235 ர‌ன் கு‌வி‌த்து கடை‌சிவரை ஆ‌ட்ட‌ம் இ‌ழ‌க்கா‌ம‌ல் இரு‌ந்தா‌ர்.

இதேபோல சதம் அடித்த ஸ்‌ட்ரா‌சும் 135 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ர். இதையடு‌த்து இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து இருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதையடுத்து அவுஸ்திரே‌லியாவுக்கு 297 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொட‌க்க ‌வீர‌ர் ஹ‌ட்‌ச் 4 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அ‌ணி‌த் தலைவ‌ர் பா‌ண்டி‌ங் 51 ர‌ன் எ‌டு‌த்து அரை சத‌ம் அடி‌த்தா‌ர்.

ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் வா‌ட்ச‌ன் 41 ர‌ன்‌னி‌ல் கள‌த்‌தி‌ல் இ‌ரு‌ந்தா‌ர். கடை‌சி நாளான இ‌ன்று ஒரு ‌வி‌க்கெ‌ட்டை இழ‌ந்‌திரு‌ந்த அவுஸ்திரே‌லியா 107 ர‌ன் இரு‌ந்தபோது ஆ‌ட்ட‌ம் டிரா‌வி‌ல் முடி‌ந்ததாக நடுவ‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்தன‌ர்.

9:21 PM | Posted in , | Read More »

வாவுட்டில் பேக்கரி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்


வாவுட்டின் அசீன்ஸ் பகுதியில் கூட்டுறவு பேக்கரியொன்றில் கடயைமாற்றிய ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கான்டன் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.

குறித்த ஊழியரின் மீது நான்கு மூடை கோதுமை மா வீழ்ந்துள்ளதாகவும் மூடைகளில் நசுங்கி அவர் உயிரிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

900 கிலோ கிராம் எடையுடைய மா மூடைகளுக்கு அடியில் குறித்த நபர் சிக்கியிருந்ததாக சக ஊழியர் ஒருவர் வாக்கு மூலமளித்துள்ளார்.

மா மூடைகளை அகற்றில் அவரை காப்பற்ற முயற்சித்த போதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார்.

உயிரிந்தவரின் பிரேதத்தை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10:16 AM | Posted in , | Read More »

வணிக செய்தி டார்வின் விமான சேவை நிறுவனம், பாபூ நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானம்



லுகானாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டார்வின் விமான சேவை நிறுவனம், ஜெனீவாவை மையமாகக் கொண்ட பாபூ நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.
அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் பாபூ நிறுவனத்தை கொள்வனவு செய்ய உள்ளதாக டார்வின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கொள்வனவின் மூலம் டார்வின் விமான சேவை நிறுவனத்தின் வருடாந்த மொத்தப் புரள்வு 80 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதி வரையில் பாபூ நிறுவனம் தனது பெயரில் இயங்கி வரும் எனவும், 2011ம் ஆண்டு முதல் டார்வின் நிறுவனத்தின் பெயரில் பணிகள் தொடரும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கள்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

டார்வின் நிறுவனம் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான விமான

10:15 AM | Posted in | Read More »

உலகின் அதிவேக கார் உருவாக்கம் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆர்வம்



உலகில் அதிவேகமாகச் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து உருவாக்கவுள்ளது.உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரயிலை விட இது அதி வேகம் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக புல்லட் ரயில் சீனாவில் ஓடுகிறது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது.

ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றைத் தயாரிக்கவுஉள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க விதத்தில் இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.

கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதில், அதிசக்தி வாய்ந்த 'ஜெட்' என்ஜின் மற்றும் ரொக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளன. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன.

எதிர்வரும் 2012ஆம் ஆண்டு இக்கார் பாவனைக்கு வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட் நோபல் ஒரு சிறந்த என்ஜினீயர். சாதனை படைப்பதில் ஆர்வம் படைத்தவர். கடந்த 1983ஆம் ஆண்டு மணிக்கு 1,019 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் டர்போ ஜெட் காரை நிவேதா பாலைவனத்தில் ஓட்டிக் கடந்து இவர்

10:09 AM | Posted in | Read More »

விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி



பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை சுத்தம் செய்ய ரஷ்யா ஸி9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது.
பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன. இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன.

இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின் பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸி9 ஆயிரம் கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும்.

இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது.

10:07 AM | Posted in | Read More »

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?



வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட

10:06 AM | Posted in | Read More »

Blog Archive

Recently Commented

Recently Added