MOST RECENT

|

ஆ ஷ ஸ் முத ல் டெ ஸ் ட் சமநிலையில் முடிவு


பி‌ரி‌ன்பே‌னி‌ல் ந‌ட‌ந்த முதல‌் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி இ‌‌ங்‌கிலா‌ந்து, அவுஸ்திரே‌லிய அ‌ணிகளு‌க்கு வெ‌‌ற்‌றி‌த் தோ‌ல்‌‌வி‌யி‌ன்‌றி சமநிலயில் முடிவடை‌ந்தது.இரு அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 260 ரன்னும், அவுஸ்திரேலியா 481 ரன்னும் எடுத்தன.

221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்து இருந்தது. குக் 132 ரன்களுடனும், ஸ்ட்ராஸ் 54 ரன் னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்றைய 5வது நாள் ஆட்டத்தில் தொடந்து சிறப்பாக விளையாடிய குக் இரட்டை சதம் அடித்தார். அவரது முதல் இரட்டை சதம் இதுவாகும். 235 ர‌ன் கு‌வி‌த்து கடை‌சிவரை ஆ‌ட்ட‌ம் இ‌ழ‌க்கா‌ம‌ல் இரு‌ந்தா‌ர்.

இதேபோல சதம் அடித்த ஸ்‌ட்ரா‌சும் 135 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ர். இதையடு‌த்து இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து இருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதையடுத்து அவுஸ்திரே‌லியாவுக்கு 297 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொட‌க்க ‌வீர‌ர் ஹ‌ட்‌ச் 4 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அ‌ணி‌த் தலைவ‌ர் பா‌ண்டி‌ங் 51 ர‌ன் எ‌டு‌த்து அரை சத‌ம் அடி‌த்தா‌ர்.

ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் வா‌ட்ச‌ன் 41 ர‌ன்‌னி‌ல் கள‌த்‌தி‌ல் இ‌ரு‌ந்தா‌ர். கடை‌சி நாளான இ‌ன்று ஒரு ‌வி‌க்கெ‌ட்டை இழ‌ந்‌திரு‌ந்த அவுஸ்திரே‌லியா 107 ர‌ன் இரு‌ந்தபோது ஆ‌ட்ட‌ம் டிரா‌வி‌ல் முடி‌ந்ததாக நடுவ‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்தன‌ர்.

Posted by M.Ariff Alavi on 9:21 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

Blog Archive

Recently Commented

Recently Added