வாவுட்டில் பேக்கரி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
வாவுட்டின் அசீன்ஸ் பகுதியில் கூட்டுறவு பேக்கரியொன்றில் கடயைமாற்றிய ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கான்டன் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.
குறித்த ஊழியரின் மீது நான்கு மூடை கோதுமை மா வீழ்ந்துள்ளதாகவும் மூடைகளில் நசுங்கி அவர் உயிரிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
900 கிலோ கிராம் எடையுடைய மா மூடைகளுக்கு அடியில் குறித்த நபர் சிக்கியிருந்ததாக சக ஊழியர் ஒருவர் வாக்கு மூலமளித்துள்ளார்.
மா மூடைகளை அகற்றில் அவரை காப்பற்ற முயற்சித்த போதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார்.
உயிரிந்தவரின் பிரேதத்தை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


