MOST RECENT

|

வெகுவிரைவில் டுவிட்டரின் மற்றுமொரு பரிமாணம்


டுவிட்டர் சமூக வலைப்பின்னல் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது.
சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.
இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது.
இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted by M.Ariff Alavi on 10:05 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "வெகுவிரைவில் டுவிட்டரின் மற்றுமொரு பரிமாணம்"

Leave a reply

Blog Archive

Recently Commented

Recently Added