க்ரொஸ் கன்ட்ரி போட்டியில் சுவிஸ் வீரர் கொலன்கா உலக சாம்பியன்
க்ரொகஸ் க்ட்ரி ஓட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் டாரியோ கொலன்கா உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்ற பத்து கிலோ மீற்றர் க்ரொஸ் கன்ட்ரி போட்டியில் கொலன்கா உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரஸ்ய வீரர் அலெக்சான்டரை விடவும் 6.7 செக்கன் முன்னிலையில் கொலன்கா போட்டித் தூரத்தைக் கடந்தார்.
போட்டி நடைபெற்ற பிரதேசத்தில் மிகவும் குளிரான காலநிலை நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றி பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், தமது திறமையை உலகிற்கு பறைசாற்ற ஓர் சந்தர்ப்பமாக இந்த வெற்றி அமைந்ததெனவும் கொலன்கா தெரிவித்துள்ளார்.
வான்கூவார் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் க்ரோஸ் கன்ட்ரி போட்டிகளில் கொலன்கா தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது


