வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு சுவிஸ் மக்கள் ஆதரவு
வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடு கடத்துவது தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகளவு மக்கள், நாடு கடத்தும் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பான மோசடிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொண்ட பெரும்பான்மை மக்கள் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட வேண்டுமென்பதனை அங்கீகரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து மக்கள் கட்சியினால் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடு கடத்தும் யோசனைத் திட்டத்திற்கு ஆதரவாக 52.9 வீதமானவர்களும், எதிராக 47.1


