இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்பது பேர் பலி
![]()
இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரயில் விபத்தில் மேலும் முப்பது பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒஸ்ட்ரிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மெனரோவ் என்ற நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மண் சரிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ரயில் பயணித்துக் கொண்டிருந்த பாதையில் மண் சரிவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த கிராமப்பகுதியில் நீர்ப்பாசனத் திட்டமொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் தெரிவி;க்கப்படுகிறது.
ரயில் பாதைக்கு அருகாமையில் மரங்கள் காணப்பட்டதனால் ரயில் பெட்டிகள் ஆற்றில் விழாது, தப்பித்துக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
புதையுண்ட பெட்டிகளில் மீட்புப் பணிகள் நடத்தப்படும் வரையில் உயிரிழப்பு விபரங்கள் பற்றிய சரியான தகவல்களை வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில மரங்களை தாக்கிய ரயில் பெட்டிகள் தற்போது காணப்படுவதாகவும்,


