
பிரின்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு வெற்றித் தோல்வியின்றி சமநிலயில் முடிவடைந்தது.இரு அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 260 ரன்னும், அவுஸ்திரேலியா 481 ரன்னும் எடுத்தன.
221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்து இருந்தது. குக் 132 ரன்களுடனும், ஸ்ட்ராஸ் 54 ரன் னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்றைய 5வது நாள் ஆட்டத்தில் தொடந்து சிறப்பாக விளையாடிய குக் இரட்டை சதம் அடித்தார். அவரது முதல் இரட்டை சதம் இதுவாகும். 235 ரன் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதேபோல சதம் அடித்த ஸ்ட்ராசும் 135 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து இருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு 297 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் ஹட்ச் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் பாண்டிங் 51 ரன் எடுத்து அரை சதம் அடித்தார்.
மற்றொரு தொடக்க வீரர் வாட்சன் 41 ரன்னில் களத்தில் இருந்தார். கடைசி நாளான இன்று ஒரு விக்கெட்டை இழந்திருந்த அவுஸ்திரேலியா 107 ரன் இருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
9:21 PM |
Posted in
feature,
sport
|
Read More »

வாவுட்டின் அசீன்ஸ் பகுதியில் கூட்டுறவு பேக்கரியொன்றில் கடயைமாற்றிய ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கான்டன் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.
குறித்த ஊழியரின் மீது நான்கு மூடை கோதுமை மா வீழ்ந்துள்ளதாகவும் மூடைகளில் நசுங்கி அவர் உயிரிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
900 கிலோ கிராம் எடையுடைய மா மூடைகளுக்கு அடியில் குறித்த நபர் சிக்கியிருந்ததாக சக ஊழியர் ஒருவர் வாக்கு மூலமளித்துள்ளார்.
மா மூடைகளை அகற்றில் அவரை காப்பற்ற முயற்சித்த போதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார்.
உயிரிந்தவரின் பிரேதத்தை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10:16 AM |
Posted in
business,
feature
|
Read More »

லுகானாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டார்வின் விமான சேவை நிறுவனம், ஜெனீவாவை மையமாகக் கொண்ட பாபூ நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.
அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் பாபூ நிறுவனத்தை கொள்வனவு செய்ய உள்ளதாக டார்வின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கொள்வனவின் மூலம் டார்வின் விமான சேவை நிறுவனத்தின் வருடாந்த மொத்தப் புரள்வு 80 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதி வரையில் பாபூ நிறுவனம் தனது பெயரில் இயங்கி வரும் எனவும், 2011ம் ஆண்டு முதல் டார்வின் நிறுவனத்தின் பெயரில் பணிகள் தொடரும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கள்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
டார்வின் நிறுவனம் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான விமான
10:15 AM |
Posted in
business
|
Read More »

உலகில் அதிவேகமாகச் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து உருவாக்கவுள்ளது.உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரயிலை விட இது அதி வேகம் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக புல்லட் ரயில் சீனாவில் ஓடுகிறது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது.
ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றைத் தயாரிக்கவுஉள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க விதத்தில் இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.
கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதில், அதிசக்தி வாய்ந்த 'ஜெட்' என்ஜின் மற்றும் ரொக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளன. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டு இக்கார் பாவனைக்கு வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார்.
ரிச்சர்ட் நோபல் ஒரு சிறந்த என்ஜினீயர். சாதனை படைப்பதில் ஆர்வம் படைத்தவர். கடந்த 1983ஆம் ஆண்டு மணிக்கு 1,019 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் டர்போ ஜெட் காரை நிவேதா பாலைவனத்தில் ஓட்டிக் கடந்து இவர்
10:09 AM |
Posted in
entertainment
|
Read More »

பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை சுத்தம் செய்ய ரஷ்யா ஸி9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது.
பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன. இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன.
இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின் பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸி9 ஆயிரம் கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும்.
இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது.
10:07 AM |
Posted in
entertainment
|
Read More »

வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..
இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட
10:06 AM |
Posted in
entertainment
|
Read More »

டுவிட்டர் சமூக வலைப்பின்னல் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது.
சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.
இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது.
இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
10:05 AM |
Posted in
entertainment
|
Read More »

10 ஆண்டுகளுக்கு பின் மியர்மர் எதிர்க்கட்சி தலைவி தனது மகனை சந்தித்தார்.மியான்மரின் எதிர்க்கட்சி தலைவி சூ கியூ (65). ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால் 20 ஆண்டுகள் இவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சூ கியூ வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சூ கியூவின் 2-வது மகன் கிம் ஆரிஸ் (33) பாங்காக் நகரில் தங்கியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் சூகி யூவை சந்தித்தார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தாயை நேரில் சந்திக்க மியான்மர் அரசிடம் விருப்பம் தெரிவித்தார்.
அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு பாங்காக்கில் உள்ள மியான்மர் தூதரகம் விசா வழங்கியது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் யன்கூன் வந்து சேர்ந்தார்.
விமானத்தில் இருந்து இறங்கிய அவர் தன்னை சந்திக்க அங்கு காத்திருந்த தனது தாயார் சூ கியூவை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தாயும் மகனும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.
நெகிழ்ச்சியான இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.
10:01 AM |
Posted in
world
|
Read More »

இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரயில் விபத்தில் மேலும் முப்பது பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
9:33 AM |
Posted in
media,
Politics
|
Read More »
வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடு கடத்துவது தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகளவு மக்கள், நாடு கடத்தும் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
9:29 AM |
Posted in
|
Read More »
க்ரொகஸ் க்ட்ரி ஓட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் டாரியோ கொலன்கா உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்ற பத்து கிலோ மீற்றர் க்ரொஸ் கன்ட்ரி போட்டியில் கொலன்கா உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரஸ்ய வீரர் அலெக்சான்டரை விடவும் 6.7 செக்கன் முன்னிலையில் கொலன்கா போட்டித் தூரத்தைக் கடந்தார்.
போட்டி நடைபெற்ற பிரதேசத்தில் மிகவும் குளிரான காலநிலை நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
9:28 AM |
Posted in
Travel
|
Read More »
அ மெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நடத்துவதால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வட கொரியா எச்சரித்துள்ளது.
|
8:59 AM |
Posted in
world,
Worldnews
|
Read More »
அமெரி
க்காவில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்தது.
இதை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு
குறித்து மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், “வாஷிங்டன் டைம்ஸ்” பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் ஒபாமாவுக்கு எதிராக 49 சதவீதம் பேர் வாக்களித்தனர். அவர்கள் வருகிற 2012-ம் ஆண்டு மீண்டும் அவர் ஜனாதிபதியாக கூடாது என தெரிவித்தனர். 41 சதவீதம் பேர் மட்டுமே அவர் மீண்டும் ஜனாதிபதியாக ஆதரவளித்துள்ளனர்.
அதேபோல குன்னிபியாக் பல்கலைக்கழகத்தின் தேர்தல் பிரிவு மாணவர்கள் நாடு முழுவதும் டெலிபோன் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்தினர். 2424 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பிலும் இதே கருத்துதான் நிலவியது.
இதன் மூலம் ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னி, மிக் ஹீகாய ஆகியோர் ஒபாமாவுக்கு போட்டியாக திகழ்கின்றனர்.
அதே நேரத்தில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர்கள் இன்னும் எந்தவித முடிவுக்கும் வரவில்லை. 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யவில்லை.
8:57 AM |
Posted in
feature,
politic,
world,
Worldnews
|
Read More »
நேற்றிரவு பிரிட்டனின் பல இடங்களில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் மேல் போனது. எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பனிப்பொழிவும் இருந்தது. ஸ்காட்லாந்து, வட கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் அண்ணளவாக 15 அங்குல பனிப்பொழிவு நேற்று பதிவாகியுள்ளது.
மேலும் வானிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்த பகுதிகளில் 40 செண்டிமீட்டர் அளவிற்கு பனிபொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.
தேவையின்றி சாலைகளுக்கு வருவதை தவிர்த்து உள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மோசமான் வானிலையினால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் வருகின்றன. ஷெப்பீல்டு அருகே எம்.1 நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாயை காப்பாற்றச் சென்ற ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஷாப்பிங் சென்ற மக்கள் பனிப்பொழிவினால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
8:55 AM |
Posted in
world,
Worldnews
|
Read More »